சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்த நடிகை தமன்னா… செம கியூட்டா இருக்காங்களே…

By Meena on செப்டம்பர் 16, 2024

Spread the love

தமன்னா பாட்டியா என்று அழைக்கப்படும் தமன்னா மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் தனது 13 வயதில் முதலிலேயே நடிக்க ஆரம்பித்தவர் தமன்னா. ஆரம்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் தான் முதலில் அறிமுகமாகி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் தமன்னா.

   

பின்னர் 2007 ஆம் ஆண்டு கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக கேடி, வியாபாரி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2009 ஆண்டு தனுசு உடன் இணைந்து படிக்காதவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையைப் பெற்றார் தமன்னா.

   

தொடர்ந்து அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, தோழா, தேவி, பாகுபலி 2, தேவி 2, ஜெயிலர், அரண்மனை 4 போன்ற அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர் தமன்னா.

 

அடுத்தடுத்து பட வாய்ப்புகளினால் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. தனது நடிப்பிற்காக கலைமாமணி, சைமா, தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார் தமன்னா. இந்நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்து நான் சிறுவயதிலிருந்து இப்படித்தான் என்று எழுதி பதிவிட்டு இருக்கிறார் தமன்னா. இதை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.