சிவகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த பிரபல நடிகர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த சிவகுமாரின் இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு தேர்ந்த ஓவியரும் மேடைப் பேச்சாளரும் ஆவார். இன்று முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் சூர்யா கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் தான்.
1965 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜேந்திரன் உடன் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவக்குமார். பின்னர் 1966 ஆம் ஆண்டு சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகிய பக்தி திரைப்படங்களில் நடித்தார். கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் வேடமிட்டு நடித்திருந்தார் சிவக்குமார். இளம் வயது சிவகுமாரின் உடலும் முகமும் தோற்றமும் அப்படியே முருகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியது. இவருக்கு அந்த வேடமணிந்தால் முருகனே நேரில் வந்தது போல் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.
தொடர்ந்து திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, வண்டிச்சக்கரம், அக்னி சாட்சி, இன்று நீ நாளை நான் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து 1970களில் முன்னணி நடிகராகவும் இருந்து வந்துள்ளார் சிவக்குமார்.
இவர் மூன்று தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஆர் முத்துராமன், ஏ வி எம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித்குமார், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகர் சிவகுமார் தான். இது மட்டுமல்லாமல் ராதிகாவுடன் இணைந்து சின்னத்திரையில் பிரபலமாக ஓடிய சித்தி மற்றும் அண்ணாமலை தொடரில் நடித்துள்ளார் சிவக்குமார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவக்குமார் நான் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்கேன் வேற எந்த நடிகராவது என்ன மாதிரி பண்ணுவார்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவர் எதை குறிப்பிட்டிருக்கிறார் என்றால் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சிவகுமார் அவர்கள் மகாபாரதம் கம்பராமாயணம் பகவத் கீதை ஆகிய புனித நூல்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு இருக்கிறார். மேலும் கம்பராமாயணம் மகாபாரதம் திருக்குறள் போன்ற நூறுக்கும் மேற்பட்ட சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி சொற்பொழிவாளராகவும் இருந்து வருகிறார் சிவக்குமார். இதை குறித்தே அவர் நான் இந்த மாதிரி நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த நடிகர்களாவது என்னை மாதிரி செய்கிறார்களா என்று கேள்வி கேட்டு இருக்கிறார் சிவக்குமார்.