நயன்தாரா கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். இவரது குடும்பம் கேரளத்தைச் சேர்ந்தது மற்றும் இவரது தாய் மொழி மலையாளம் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படிக்கும் போது மாடலாக பணிபுரிந்தவர் நயன்தாரா.
2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்து அறிமுகமானார் நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நயன்தாரா.
அடுத்ததாக கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், ஏகன், வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல், தனி ஒருவன், நானும் ரவுடிதான், நண்பேண்டா போன்ற கமர்சியல் படங்களில் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார் நயன்தாரா.
தொடர்ந்து இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் போன்ற ஹீரோ சப்ஜெக்டே இல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட படங்களில் தைரியமாக நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார் நயன்தாரா. இவர் படங்கள் எல்லாமே பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான். தனது அபாரமான நடிப்பிற்காக பல ரசிகர்களை கொண்டவர் நயன்தாரா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நயன்தாரா தன் வாழ்க்கையில் இந்த நிலைமைல இருப்பதற்கான காரணத்தை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் எனக்கு கிடைத்த பெயர் புகழ் மரியாதை பணம் இது எல்லாமே சினிமாவால மட்டும்தான் எனக்கு கிடைச்சது. கஷ்டப்படும்போது சினிமா கை கொடுத்தது. இன்னைக்கு நான் இந்த நிலைமையில இருக்குறதுக்கு காரணம் சினிமா தான். அதனால என்னைக்கும் என் வாழ்க்கையில சினிமா தான் எல்லாமே என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.