Categories: சினிமா

“தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டேன்…” இளையராஜாவை பாட வைக்க தயக்கம்…! மனம் திறந்து பேசிய டி.ராஜேந்தர்… சுவாரஸ்ய பின்னணி…!!

Spread the love

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகத் திகழும் டி.ராஜேந்தர், தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இயக்குநர் சாய் ரமணி இயக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ என்ற திரைப்படத்திற்குத் தாம் பாடல் எழுதி இசையமைப்பதாகவும், இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்கவே இசைஞானி இளையராஜாவை அதில் ஒரு பாடலைப் பாட வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். அவரிடம் கேட்க முதலில் தயங்கினாலும், இசை மீதான மரியாதையால் இது சாத்தியமானது. நான் அதிக சுயமரியாதை கொண்டவன்; தஞ்சை என்று சொல்லி வாழ்வேனே தவிர, தன்மானத்தை விட்டுவிட்டு யாளிடமும் தஞ்சம் அடையமாட்டேன்” என டி.ஆர் உருக்கமாகப் பேசினார்.

80-களில் ‘ஒருதலை ராகம்’, ‘உயிருள்ளவரை உஷா’, ‘மைதிலி என்னை காதலி’ எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து, அமலா, நளினி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய டி.ஆர், ‘கவண்’ திரைப்படத்திற்குப் பிறகு திரையுலகில் அதிகப் பணிகளை மேற்கொள்ளாமல் இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் இசை அமைப்பாளராக அவர் அவதாரம் எடுத்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அடகடவுளே..! சொந்த மகனே செய்த துரோகம்… 84 வயது தந்தை தற்கொலை… மகள் உடைத்த பகீர் உண்மைகள்… மனதை உலுக்கும் சோகம்…!!

முதியவரான 84 வயது கேப்ரியல் கூட்டின்ஹோவை அவரது சொந்த மகனே கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும்…

1 minute ago

யார் இந்த மஞ்சுநாத்?… கதறும் அரசுப் பேராசிரியை… தங்கப்பதக்கம் வென்ற பெண்ணின் மரணம்… மாமியார் மீது மருமகன் வெறிச்செயல்…!!

ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் பல விருதுகளை வென்ற சரண்யா என்ற பெண், தனது கணவர் மஞ்சுநாத்துடன் ஏற்பட்ட குடும்பத்…

19 minutes ago

“மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?”…. தமிழ்நாட்டில் மீண்டும் வெடித்த மொழிப் போர்… கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்….!

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே ‘இருமொழிக் கொள்கை’ என்பது மாநிலத்தின் மொழி உரிமை சார்ந்த அடிப்படை அடையாளமாகவும், மாநில இறையாண்மையின்…

20 minutes ago

BREAKING: “பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை உடைத்த கோவை பெண்”…. நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் தனுஷ்….!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடைகளற்ற ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும்…

24 minutes ago

10 நாள் மர்மம்… CCTV-யில் சிக்கிய 2 கார்கள்… ஹோட்டல் பழக்கம்… கள்ளக்காதல்… நள்ளிரவு கொலை… காதலனுடன் வாழ கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி…!!

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல்…

26 minutes ago

“கட்சி தாவியவர்களுக்கு இனி ‘கல்தா’?”….. மதுராந்தகம் – தாராபுரம் பாடம்… விஜய் எடுத்த திடீர் முடிவு…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மிக தீவிரமான களம் கண்டு முடிந்துள்ளது. மதுராந்தகத்தில் 85…

30 minutes ago