தமிழக முதல்வரும் முன்னாள் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகராக திரையுலகிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் உருவாக்கம் மற்றும் மேக்கிங் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் வந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு என கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, படத்தின் விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி கால காதல் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
“கல்லூரியில் படித்தபோது ஒருவரை காதலித்தேன். அந்த உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. பின்னர் இருவருமே பேசி சுமூகமாகப் பிரிந்துவிட்டோம். அந்த பிரேக்கப் காலத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் மற்றும் சோகப் பாடல்களைத் தான் தொடர்ந்து கேட்டு ஆறுதல் அடைந்தேன். அதன் பிறகு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். சஞ்சயின் இந்த ஓபனான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…