ஒன்றரை வருட காதல்… எனக்கு இருந்த ஆறுதல் அதுதான்… கல்லூரி லவ் ஃபெயிலியர் குறித்து மனம் திறந்து பேசிய ஜேசன் சஞ்சய்…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

தமிழக முதல்வரும் முன்னாள் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகராக திரையுலகிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் உருவாக்கம் மற்றும் மேக்கிங் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் வந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு என கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, படத்தின் விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி கால காதல் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

   

“கல்லூரியில் படித்தபோது ஒருவரை காதலித்தேன். அந்த உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. பின்னர் இருவருமே பேசி சுமூகமாகப் பிரிந்துவிட்டோம். அந்த பிரேக்கப் காலத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் மற்றும் சோகப் பாடல்களைத் தான் தொடர்ந்து கேட்டு ஆறுதல் அடைந்தேன். அதன் பிறகு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். சஞ்சயின் இந்த ஓபனான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.