காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற 13ம் தேதி இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உயிருள்ள வரை உஷா படம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது இதுகுறித்து இயக்குனர் டி ராஜேந்தர் கூறியதாவது, 1980 காலகட்டம் என்பது காதலை சொல்வதற்கே கஷ்டப்பட்ட ஒரு காலம். ஒரு பெண் அருகில் போய் பேசுவதையே சரித்திரமாக நினைப்பார்கள். அந்த பொண்ணு கிட்ட எப்படி காதலை சொல்லலாம், காதல் கவிதை எப்படி சொல்லலாம் என்று நினைப்பது ஒரு காலகட்டம்.
மௌனமான காதல் ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும் இருந்ததால் தான் ஒரு தலை ராகம் படத்துக்கு பெண்களும் படை எடுத்தார்கள். அந்த படம் எடுத்தது டி ராஜேந்தர். படை எடுத்தது பெண்களாக இருந்தார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது காதலை சொல்ல முடியாத உணர்வை அந்த படம் பிரதிபலித்தது.
நான் பிறகு நிறைய படங்கள் எடுத்தாலும் உயிருள்ள வரை உஷா படம் தான் என்னை வேறொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. எனவே அந்த லவ் ஸ்டோரியை இன்று இருக்கிற 2 கே கிட்ஸ் இளம் தலைமுறைக்கு போய் எப்படி அவர்களை பிடிக்க வேண்டும் என்று மக்களின் மனநிலையை அறிந்து படம் எடுத்தவன் நான். எனவே உயிருள்ளவரை உஷா படத்தை இப்போது மீண்டும் ரி ரிலீஸ் செய்கிறேன் என்று இயக்குனர் டி ராஜேந்தர் கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…