சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, தனது டெலிவரி பெட்டியைச் சாலையில் தேய்த்தபடி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது வெறும் அநீதி மட்டுமல்ல, உழைப்புச் சுரண்டலின் உச்சம் என்று பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
A Swiggy rider drag his food delivery box on the road after being paid a pathetic ₹35 for a 6.2 km trip this isn’t just unfair, it’s outright exploitation.
This is what happens when companies squeeze workers to the bone and expect them to survive on scraps. Absolutely… pic.twitter.com/vO12y6PV74
— Krishnan Gaur (@Mercedes5494) April 15, 2026
பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களை எந்த அளவிற்கு நசுக்குகின்றன என்பதற்கும், அவர்களை வெறும் கூலிகளாகக் கருதி மிகக் குறைந்த ஊதியத்தில் வாழக் கட்டாயப்படுத்துவதற்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். எலும்பு முறிய உழைக்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மரியாதையையும் ஊதியத்தையும் வழங்காத இத்தகைய போக்கு மிகவும் கேவலமானது மற்றும் கண்டிக்கத்தக்கது.
