நமது வீட்டு பூஜை அறையில் பலதரப்பட்ட சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்கிறோம். அப்படி வழிபடும் போது வாஸ்து ரீதியாக சில குறிப்பிட்ட சுவாமி படங்களை அல்லது சாமி சிலைகளை ஒன்றாக வைத்து வழிபடக்கூடாது என்று கூறப்படுகிறது. வீடுகளில் விநாயகர் சிவபெருமான் பார்வதி தேவி ஆகிய சுவாமிகளின் படங்களை, சிலைகளை வைத்து வழிபடுகிறோம். விநாயகப் பெருமான் ஞானம் மற்றும் நல்ல தொடக்கத்தை தருபவராக இருக்கிறார். லட்சுமிதேவி செல்வத்தை வழங்கும் கடவுளாக இருக்கிறார். சரஸ்வதி தேவி கல்விக்கு அதிபதியாக கல்வியை வழங்குபவராகவும் இருக்கிறார். இதனால் ஒவ்வொரு சுவாமியும் ஒவ்வொரு ஆற்றல் கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
அதே நேரத்தில் வீடுகளில் உள்ள பூஜையறைகளில் அனுமன் மற்றும் சனி பகவானை அருகருகே வைத்து வழிபாடு செய்யக் கூடாது. அனுமான் நமக்கு சனி பகவான் கொடுக்கக்கூடிய தாக்கங்களை குறைக்க கூடியவராக இருக்கிறார். ஆகவே இந்த இரு சுவாமி படங்களை அருகருகே ஒன்றாக வைத்து வழிபாடு செய்யும்போது அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதில் தடுமாற்றம் வரலாம். ஆகவே இந்த சுவாமி படங்களை தனித்தனியே வைத்து வழிபாடு செய்வதே சிறப்பாக இருக்கும்.
அதே போல் காளிதேவி மற்றும் துர்கா தேவி படங்களை லட்சுமி தேவி சரஸ்வதி தேவி கிருஷ்ணர் விநாயகர் படங்களுக்கு அருகே வைத்து வழிபாடு செய்யக் கூடாது. இது நம்முடைய ஆற்றலில் சில தடுமாற்றங்களை கொடுக்கக்கூடும். அதேபோல் ஒரே கடவுளுடைய சிலைகள் அல்லது படங்களை பல்வேறு விதமாக வாங்கி வைத்து வழிபாடு செய்வதையும் தவிர்ப்பது நல்லது. ஒரே கடவுளுடைய படம் இரண்டு மூன்று என இருக்கிற பட்சத்தில் அதை வெவ்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்யலாம் என்று வாஸ்து ரீதியாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன்…
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…
மத்திய அரசு இன்று (மே 1, 2026) முதல் அமல்படுத்தியுள்ள 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் 2026' (PROG Rules),…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது உலக…
மத்திய அரசின் 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமையில் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த…