தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் எஸ்வி சேகர். இவர் திமுக ஆதரவாளராக இருப்பதால் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, விஜய் இன்னும் பனையூரை விட்டே வெளியே வரலை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் மாதத்தில் இருந்தே சுற்றுப் பயணம் ஆரம்பிச்சிட்டார்.
தஞ்சாவூர் காரைக்குடின்னு தினமும் பல ஊர்களுக்கு முதல்வர் பயணம் செய்கிறார். அந்த நெருப்பு உள்ளுக்குள்ள இருக்கணும். விஜய்கிட்ட அது சுத்தமா இல்லை. நான் ஜெயிச்சுடுவேன். எங்களுக்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்குது. இதென்ன குப்பை தொட்டியா? வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி இருக்கிறதுக்கு? எப்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கும்?
சினிமா வேற அரசியல் வேற. விஜயை பார்க்க வர்ற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறவே மாறாது. உள்கட்டமைப்பு இல்லை. அரசியல் அறிவு என்பது சுத்தமாக இல்லை. உலகத்திலேயே கேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி கொடுத்த அரசியல்வாதி விஜய் தான். கேமராக்களை சந்திக்க பயப்படுகிற ஒரு கோழைத்தனமானவர் விஜய் என்று நடிகர் எஸ்வி சேகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…