சுத்தி இருக்க எல்லாமே தப்பா இருக்கு.. ஆனா நீங்க சரியா இருங்க.. இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளித்த நடிகர் சூர்யா..!

By Mahalakshmi on ஜூலை 25, 2024

Spread the love

அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். பல ஆண்டுகளாக இதனை செய்து வரும் நிலையில் நேற்று 45 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்திக் மூவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் பேசியபோது அண்ணன் சூர்யாவுக்கு சினிமாவில் ஆசை இல்லை, தனக்கு தான் சினிமா மீது ஆசை இருந்ததாக கூறினார்.

   

   

மேலும் தனக்கு இரண்டு வயது இருக்கும்போது இந்த அறக்கட்டளையை தொடங்கியதாக எனது தந்தை கூறியிருந்தார். அப்போது இருந்து தற்போது வரை பல மாணவ மாணவியர்களுக்கு உதவி செய்து வருகிறோம் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினார். இதையடுத்து பேசிய சூர்யா கூறியிருந்ததாவது கார்த்தி சொன்னதைப் போல எனக்கு முதலில் சினிமா மீது ஆசை இல்லை.

 

சினிமாவுக்கு வருவேன், கேமரா முன் நிற்பேன் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. திடீரென்று அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எதுவுமே தெரியாமல் கடைசியில் இருந்தால் கூட போராடினால் முன்னேற முடியும் கத்தி இருக்கிறேன். எல்லாமே தப்பா இருக்கும் நெகட்டிவிட்டி ரொம்ப அதிகமா இருக்கும்.  ஆனால் நீங்க சரியா இருக்கணும்.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் முதல் முறை பட்டதாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கல்விதான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். அதை மட்டும் விட்டுடாதீங்க அகரம் குழுமத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது என்று இன்றைய இளைஞர்களுக்கு மோட்டிவேஷன் ஆக பேசினார் நடிகர் சூர்யா. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பல மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.