Connect with us

தனி விமானம் வாங்கிய சூர்யா… அடேங்கப்பா… ஆடம்பர வசதிகளை கொண்ட இந்த விமானத்தின் விலை இத்தனை கோடியா…?

CINEMA

தனி விமானம் வாங்கிய சூர்யா… அடேங்கப்பா… ஆடம்பர வசதிகளை கொண்ட இந்த விமானத்தின் விலை இத்தனை கோடியா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. விதவிதமான கதாபாத்திரங்கள் வித்தியாசமான கெட்டப்புகள் என இவரின் படங்கள் என்றாலே சஸ்பென்சாக இருக்கும். மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மகன்தான் சூர்யா இவரது சகோதரர் கார்த்தியும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது 22 ஆவது வயதில் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா, 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, அயன், சிங்கம் படத்தொடர் என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை சினிமாவில் தக்க வைத்துள்ளார் சூர்யா.

   

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட சூர்யா இவர்கள் இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தென்னிந்தியாவின் பல மொழித் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இது தவிர அகரம் பவுண்டேஷன் என்ற டிரஸ்டை உருவாக்கி வறுமையில் படிக்க இயலாத குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார் சூர்யா.

 

சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகிறார் சூர்யா.

இந்தியாவில் பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு என தனி விமானத்தை வைத்திருக்கின்றனர் சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நயன்தாரா உள்ளிட்டோர் தனி விமானத்தை வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார். நடிகர் சூர்யா தனி விமானம் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டசால்ட் ஃபால்கன் 2000 ( Dassault Falcon 2000) என்ற சகல ஆடம்பர வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதில் நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இந்த விமானத்தில் இருக்கின்றன. இந்த விமானத்தின் விலை ரூபாய் 120 கோடி என கூறப்படுகிறது. தமிழில் அதிக விலையில் தனி விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் நடிகர் சூர்யா.

More in CINEMA

To Top