CINEMA
ஊரே கொண்டாடும் வாழை படத்தை பார்த்து ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க..!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாலா, மிஷ்கின், தனுஷ், சூரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்த படம் குறித்து புளூ சட்டை மாறன் கூறியதாவது, மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவங்களை வைத்து சினிமாவுக்கு ஏற்ற மாதிரி வாழை படத்தைச் எடுத்து இருக்காரு. இந்த படத்தோட ஹீரோ ஒரு 13 வயசு பையன். அந்த பையனுக்கு ஒரு பிரின்ட் இருக்கான். இவன் ரஜினி ரசிகன். அவன் பிரிண்ட் கமல் ரசிகன். இருந்தாலும் ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.
ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போறாங்க. ஹீரோவுக்கு அவங்க கிளாஸ் டீச்சர் மேல ரொம்ப பிரியம். அவர்களை பார்க்கிறதுக்காகவே தான் அவன் ஸ்கூலுக்கு போறான்னு சொல்லலாம். அந்த ஹீரோவுக்கு அப்பா கிடையாது. குடும்ப கஷ்டம் காரணமாக ஹீரோவோட அம்மாவும் அக்காவும் சுற்று வட்டாரத்துல இருக்க வாழை தோப்புக்கு போய் வாழைத்தார் அறுத்து லாரியில் லோடு ஏத்துறாங்க. ரொம்ப கஷ்டமான வேலையா பண்ணிட்டு இருக்காங்க. ஸ்கூல் லீவ் வந்தாலே ஹீரோவுக்கு பயம் வந்துரும். ஏன்னா குடும்ப கஷ்டத்துக்காக ஹீரோவையும் வாழை தார் லோடு ஏத்துவதற்காக கூட்டிட்டு போவாங்க.
கஷ்டமான வேலைக்கு கூட்டு போறாங்களேன்னு ஹீரோ அடம் பிடிப்பான். இந்த முழு கதையும் படத்தோட கிளைமாக்ஸ் நோக்கி தான் நகர்த்திருக்காங்க. உண்மைக்கு நெருக்கமா படம் எடுத்து இருக்காங்க. படத்துல நடிச்ச ஒவ்வொரு கேரக்டரும் அற்புதமா நடிச்சிருக்காங்க. கேமரா மேன் நல்ல வேலை பார்த்து இருக்காரு. அதே ரெண்டு பசங்க அதே பசங்க அப்படிங்கற சீன் ரிப்பீட் ஆயிட்டே இருந்துச்சு. அது கொஞ்சம் தொய்வ ஏற்படுத்திருச்சு. அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு போய் இருந்தா நல்லா இருந்திருக்கும். ஒரு ஸ்கூல் பையன் டீச்சரை பார்க்கிறான் அப்படிங்கறது பல இடங்களில் நடக்கிறது தான்.
ஆனா படத்துல அது கொஞ்சம் நெருடலா இருந்துச்சு. என்னதான் படத்துல குறைகளும் ஏற்று இரக்கமும் இருந்தாலும் படத்தோட கிளைமாக்ஸ் நம்மள கலங்க வைத்துவிட்டது. கிளைமாக்ஸ் சூப்பரா இருந்துச்சு. மொத்தத்தில் வாழை படத்துல ஸ்கூல் காட்சிகள் லவ் காட்சிகளை கொஞ்சம் சுவாரசியப்படுத்தி இருந்தாங்கன்னா சூப்பரா இருந்திருக்கும். இருந்தாலும் நீங்க இந்த படத்தை பார்த்தீங்கன்னா உண்மைக்கு நெருக்கமான வாழ்வியல் படமா இருக்கும். இந்த மாதிரியான படங்களை நாம் பார்த்து ஆதரவு கொடுத்தால்தான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கும். இந்த படத்தை பார்க்க மிஸ் பண்ணாதீங்க என கூறியுள்ளார்.