CINEMA
இந்த வருடத்தின் சிறந்த படமா வாழை…? அனல்பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ…
மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் ஆவார். மாரி செல்வராஜ் பத்திரிக்கையாளராகவும் சில வருடங்கள் பணிபுரிந்துள்ளார். ஆனந்தவிகடனில் மறக்க நினைக்கின்றேன் என்ற தொடரை எழுதியவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தின் மூலமாகவே மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் மாணவன் என்னென்ன இன்னல்களை சந்திக்கிறான் என்பதை நம் கண் முன்னே தத்ரூபமாக எடுத்துக்காட்டிருப்பார் மாரி செல்வராஜ். அதேபோல் அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன், பின்னர் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து மாமன்னன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
தற்போது தனது நான்காவது படமான வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளதாக கூறியிருந்தார்.
இத்திரைப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் அவர்களின் மனைவி திவ்யா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்களும் நெட்டிசன்களும் தங்களது விமர்சனங்களை எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை இனி காண்போம்.
வாழைத் திரைப்படத்தை பார்த்த பா ரஞ்சித் ,திரையில் நீ அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய். உன் திரை மொழியில் நான் உருகி விட்டேன். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் மாரி செல்வராஜ் உன் வாழ்க்கையில் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் இப்போது உன்னுடைய இருண்ட பக்கங்களை வாழை படத்தின் மூலமாக பார்த்ததுக்கு பிறகு உன் மீதுள்ள மரியாதை ஆயிரம் மடங்காக அதிகரித்து இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.
வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி நம் பாலிய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும் ஆனால் அதை ஒரு திரை காவியமாய் படைத்து மனதிற்கு நெருக்கமாக ஆக்கிவிட்டார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் எல்லோரும் நடித்தார்கள் என்று சொல்ல முடியாது வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறவேண்டும். இந்த படத்தை பார்த்த பின்பு மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகி இருக்கிறது என்று கார்த்தி பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை பார்த்த மிஷ்கின், நெல்சன், தனுஷ், மணிரத்தினம் போன்ற பல பிரபலங்களும் பாராட்டி இருக்கின்றனர்.
வாழை திரைப்படத்தை பார்த்த பின்பு நெட்டிசன்கள் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் வாழை. இந்த படத்தை பார்க்கும்போது நம் வாழ்க்கை நம் மனதோடு சேர்ந்து பயணிக்கும். தமிழ் சினிமாவில் இது அரிதான ஒரு படைப்பு என்று ஒருவர் கூறியிருந்தார். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களின் மனதை உருக்கும் படி உள்ளது. மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என அனைவரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இந்த திரைப்படம் பார்ப்போர்களின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நெட்டிசன்கள் வாழை திரைப்படத்தை புகழ்ந்து விமர்சனங்களை கூறியிருக்கின்றனர்.