CINEMA
யானையோ, பாம்போ, மயிலோ.. எதுவா இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பாங்க.. 2026-ல் நானும் விஜய் சாரும்.. TVK பற்றி பேசிய கூல் சுரேஷ்..!!
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜயின் 69-ஆவது படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார். அந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு நேரமாக ஈடுபடப் போவதாக விஜய் அறிவித்தார். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, முக்கிய பிரமுகர்கள் நியமனம், மாநாடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். நேற்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை தளபதி விஜய் அறிமுகப்படுத்தினார். சோசியல் மீடியா முழுவதும் இப்போது அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கூல் சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, கட்சிக்கொடி யானையா இருந்தாலும் சரி, பூனையாய் இருந்தாலும் சரி, பாம்பாய் இருந்தாலும் சரி, மயிலா இருந்தாலும் சரி எதிர்ப்பு தெரிவிச்சு தான் பேசுவாங்க. இங்க நம்ம எப்படி யானைன்னு சொல்றோமோ அதே மாதிரி தான் எல்லா இடத்திலும் யானை என்று சொல்லுவாங்க. ஓட்டு போட போகும்போது கூட யானை சிகப்பா இருக்கா, கருப்பா இருக்கா, வெள்ளையா இருக்கான்னு பார்க்க மாட்டோம். யானை சின்னம் இருந்தாலே அங்க ஓட்டு போட்டுட்டு வந்துருவோம். யானை அப்டிங்கறது ஒரு சின்னம் அப்படின்கிறத விஜய் சார் கொடி மூலமா கொண்டு வராரு. எது பண்ணாலும் ஒரு விமர்சனம் வந்துகிட்டு தான் இருக்கும்.
இப்ப நான் தியேட்டருக்கு வரும்போது ஒருத்தர் சொன்னாரு விஜய் சார் கொடி ஏத்தும் போது எனக்கு உங்க ஞாபகம் தான் வந்துச்சுன்னு சொன்னாரு. உங்களோட ஸ்கூல் சுரேஷ் கட்சியும், தமிழக வெற்றிக்கழகமும் ஒண்ணா இணைய போறதா நீங்க ஏற்கனவே பல பேட்டிகளில் சொல்லிட்டு இருந்தீங்கன்னு சொன்னாரு. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த கட்சியில் கூல் சுரேஷ் கட்சி கூட்டணியா இருக்கும். கழுதை தான் என்னோட சின்னம். அதுக்கு காரணம் மக்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கோ, அவர்களோட சுமைகளை எல்லாம் நான் தாங்குவதற்கு கழுத சின்னத்தை தான் நான் போட்டியிட போறேன். அதுல எந்த மாற்ற கருத்தும் கிடையாது. கழுதை எல்லார் வீட்டு வாசல்லையும் படமா வச்சிருப்பாங்க.
என்னை பார் யோகம் வரும் அப்படின்னு, கழுதை முகத்துல முழிச்சுட்டு போனா நல்லது நடக்கும் என்று சொல்லுவாங்க. அதனால 2026ல் கூல் சுரேஷ் கட்சியும் தமிழக வெற்றி கழகம் கட்சியும் கண்டிப்பா இணைந்து மக்களுக்காக செயல்படும். ஒருவேளை தமிழக வெற்றி கழகத்து கூட கூல் சுரேஷ் கட்சி இணைவதற்கான சாத்தியம் இல்லன்னா, யாராவது எதிர்ப்பு தெரிவிச்சா, விஜய் சாரே வேண்டாம்னு சொன்னா கூட என்னோட ஆதரவு வெளியில் இருந்து நான் கொடுத்துக்கொண்டே தான் இருப்பேன். விஜய் சாரோட பலம் யானை மாதிரி இருக்கும். அவரோட சிந்தனைகள் பூனை மாதிரி இருக்கும். சில இடத்துல பூனை மாதிரி வேலை பார்த்தால் தான் வேலை நடக்கும். சில இடத்தில் யானை மாதிரி பலமா இருந்தாதான் அந்த வேலை நடக்கும் என கூறியுள்ளார்.