CINEMA
சிறப்பாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் நடிகையின் வளைகாப்பு விழா.. வைரலாகும் போட்டோஸ்..!!
பிரபல சீரியல் நடிகையான நேஹா கவுடா கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவரது பூர்வீகம் பெங்களூரு. நேஹா கவுடாவின் தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்டாக வேலை பார்த்து வருகிறார். அவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான மேக்கப் ஆர்டிஸ்ட் நேஹா கவுடாவின் அப்பா தான்.
சிறு வயதிலிருந்து நேஹா கவுடாவுக்கு நடனம் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தேட்டர் ஆர்டிஸ்ட் ஆக நேஹா வேலை பார்த்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் நடிப்புக்குள் நுழைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன், காயத்ரி, குணா ஆகிய சீரியல்களில் நேஹா கவுடா நடித்துள்ளார்.
இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பலரும் சோசியல் மீடியாவில் நடிப்பை பாராட்டியும் வருகின்றனர். இவர் சந்தன் கவுடா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேஹா ஹவுடா தனது ஸ்கேன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
இந்த நிலையில் நேஹா கவுடாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் நேஹா கவுடாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.