CINEMA
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட முத்து… விஜயாவிற்கு அல்வா கொடுத்த மீனா… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவை திட்டியதற்காக வருந்திய முத்து தான் அப்படி செய்திருக்கக் கூடாது என்று நினைக்கிறான். உடனே மீனாவிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து வீட்டுக்கு கிளம்புகிறான். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் முத்துவை சமாதானப்படுத்துவதற்காக கோழிக் குழம்பை மணக்க மணக்க சமைத்துக் கொண்டிருக்கிறார் மீனா. அங்கு வந்த ஸ்ருதி, விஜயா என்ன இவ்வளவு மணக்குது என்ன சமையல் பண்ணி இருக்கே என்று கேட்கின்றனர். அதற்கு மீனா கோழி குழம்பு பண்ணியிருக்கேன் என்கிறாள். அந்த நேரத்தில் அங்கு வந்த ரோகிணி மனோஜ் ரவி அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து மீனாவின் சமையலை பாராட்டி சாப்பிட்டு முடிக்கின்றனர்.
அதற்குப் பிறகு முத்து வீட்டுக்கு கையில் அல்வா வாங்கிக்கொண்டு வருகிறார். மீனவரிடம் எனது மன்னிச்சிடு, நான் பண்ணது ரொம்ப தப்புதான். உங்க அம்மா வீட்டுக்கு போகாத உன் தம்பிட்ட பேசாதன்னு சொன்னது நான் பண்ண மிகப்பெரிய தப்பு தான். அவன் நல்லா இருக்கட்டும்னு நினைச்சு தான் நான் சொன்னேன். அவனும் நல்ல பையன் தான் மாமா மாமா அப்படின்னு என் பின்னாடியே தான் வந்தான். அவன் சேர்க்க சரியில்லை மீனா அதுக்காக தான் அப்படி சொன்னேன். இனிமேல் நீ எப்ப வேணாலும் உன் வீட்டுக்கு போகலாம் அப்படின்னு சொல்றான். இந்தா அல்வா சாப்பிடு உனக்கு பிடிக்கும்ல அதான் வாங்கிட்டு வந்தேன் அப்படின்னு கொடுக்கிறான். உடனே மீனா கண்கலங்கி அழுகிறாள். நீங்க சமாதானம் ஆயிடுவீங்க என்னை புரிஞ்சுக்குவீங்க எனக்கு தெரியுங்க என்று சொல்லி அழுகிறாள்.
பின்னர் முத்து சாப்பாடு போடு பசிக்குது என்று சொல்கிறார். அப்போ அங்க வந்த ரவி முத்து அண்ணி சூப்பரா சமைச்சு இருந்தாங்க. நாங்க எல்லாருமே காலி பண்ணிட்டோம் அப்படின்னு சொல்கிறார் ரவி. அடப்பாவிகளா எனக்காக ஒரு சின்ன கிண்ணத்துல கூட எடுத்து வைக்க மாட்டீங்களா அப்படியாடா எல்லாத்தையும் சாப்பிட்டு காலி பண்ணுவீங்க என்று முத்து கேட்கிறார். உடனே மீனா கொஞ்சம் இருங்க என்று சமையல் அறைக்கு சென்று ஒரு சிறிய பாத்திரத்தில் குழம்பு கொண்டு வருகிறாள். ஆஹா பாத்தியா என் பொண்டாட்டி எனக்காக எடுத்து வச்சிருக்கா என்று சொல்கிறார் முத்து. உடனே அண்ணி குழம்பு எல்லாம் காலியாச்சு. இது எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார். அதற்கு மீனா உங்க எல்லாருக்கும் வைக்கிறதுக்கு முன்னாடி அவருக்காக நான் தனியா எடுத்து வச்சுட்டேன் என்று சொல்கிறாள் மீனா. உடனே ரவி பாத்தியா அண்ணா உனக்காக அண்ணி எடுத்து வச்சிருக்காங்க நீ ரொம்ப லக்கி என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போ அங்கு வந்த விஜயாவிடம் மீனா முத்து வாங்கிட்டு வந்து அல்வாவை கொண்டு கொடுத்து அத்தை இந்தாங்க அல்வா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல அன்னைக்கு நீங்க அல்வா சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னீங்களே இந்தாங்க சாப்பிடுங்க என்று கூறி நக்கல் அடிக்கிறார் மீனா. விஜயா என்ன இவன் நேத்து எப்படி இருந்தவன் எனக்கு இப்படி மாறிட்டானே என்று ஷாக் ஆகி முழிக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.