நடிகை மேகா ஆகாஷ் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது பெற்றோர்கள் விளம்பரத்துறையில் வேலை செய்பவர்கள் ஆவர். 2019 ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் மேகா ஆகாஷ்.
அதே ஆண்டு சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து பிரபலமானார் மேகா ஆகாஷ். அடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தில் நடித்தார் மேகா ஆகாஷ். இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.

பின்னர் 2020 ஆம் ஆண்டு Zee5 இல் வெளியான ஒரு பக்க கதை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார் மேகா ஆகாஷ்.
இந்நிலையில் தற்போது மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவுடன் நிச்சயம் நடந்து முடிந்திருப்பதை தனது இன்ஸ்டால் பகிர்ந்து உள்ளார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் சிம்பிளாக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சைலன்டாக இப்படி நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
