திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற அளவீட்டுப் பணிகளில் சில இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதால், துல்லியமான கணக்கெடுப்பிற்கு கூடுதல் அவகாசம் தேவை எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிவி கவுன்சிலின் உத்தரவுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் மலை மீது ஏதேனும் புதிய விரிவாக்கப் பணிகள் அல்லது கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவை குறித்த முழுமையான விவரங்களையும் தங்களது புதிய சர்வே அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தரப்பிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
