Connect with us

CINEMA

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்திற்கு கம்மியாக சம்பளம் வாங்கிய சூர்யா.. காரணத்தை கேட்டு நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்..!!

முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

வரலாற்று பின்னணியில் உருவான கங்குவார் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் கங்குவா படத்தில் நடிப்பதற்கு சூர்யா 28 கோடி தான் சம்பளம் வாங்கினாராம். அதற்கு 24 படத்தின் தோல்விதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதாவது 24 படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்தது. சூர்யாவின் 24 படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்டு சூர்யா கங்குவா படத்திற்கு குறைவான சம்பளத்தை பேசி முடித்துள்ளார்.

தயாரிப்பாளரின் நிலைமையை அறிந்து அதற்கு ஏற்ப சூர்யா தனது சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்துள்ளார். இது போலவே மற்ற நடிகர்களும் இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top