Categories: சினிமா

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி அட்டர் ப்ளாப் ஆன சூர்யாவின் மூன்று படங்கள்!

Spread the love

தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.

சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என பெயர் வைத்து அவரை நடிகராக்கினார். அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார்.

#image_title

இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் படு மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கங்குவா படத்தை ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு ஆக்கியது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஸ்டுடியோ கிரீன் தலைமை செயல் அதிகாரி தனஞ்செயனும்தான். படம் ஆரம்பித்ததில் இருந்து அவரும் தனஞ்செயனும் கொடுத்த  பில்டப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தியாவே பார்க்காத படம், பாகுபலிக்கு சவால் என்றெல்லாம் பேசிப் பேசியே ரசிகர்களுக்குப் படத்தை திகட்டவைத்தனர். இப்படி ஓவர் பில்டப் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கேற்றவாரு படம் இருக்கவேண்டும். படம் சுமாராக இருந்தால் இந்த ஓவர் பில்டப் கொடுக்கும் வேலையாவது செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.

#image_title

இப்படி சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்துக்கும் ஆனது. 2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தைத் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது. அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

#image_title

அதே போல அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். படம் பற்றி பேசிப் பேசி பில்டப் கொடுத்தனர். ஆனால் படம் ரிலீஸான போது கடுமையாக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. அப்போது சூர்யாவின் மார்க்கெட் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தது. ஆனால் இந்த படத்துக்குப் பிறகு அப்படியே சரியத் தொடங்கியது.

 

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago