சூர்யா, ஜோதிகா எடுத்த திடீர் முடிவு… மொத்தமா இப்படி இழுத்து மூடிட்டாங்களே… இதுதான் காரணமா..?

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சூரியா தனது மனைவியுடன் சேர்ந்து தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் தான் 2d என்டர்டெயின்மென்ட்.

2D Entertainment Requires Associate director to work in their next film  project | 2D Entertainment: சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்ற  வாய்ப்பு... !

   

கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அதன் பிறகு சூர்யா நடித்த படங்கள் மட்டுமல்லாமல் கார்த்தி நடித்த சில படங்களையும் உரியடி உள்ளிட்ட வெளி நடிகர்கள் நடித்த சில படங்களையும் 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக இயங்கி வந்த இந்த நிறுவனம் இறுதியாக ரெட்ரோ திரைப்படத்தை தயாரித்தது. இப்படியான நிலையில் தற்போது இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

   

கணவரை விட ஹிந்திதான் முக்கியம்! ஜோதிகாவின் தொடர் சர்ச்சை பேச்சு.. முடிவு  கட்டுவாரா சூர்யா?

 

இதனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து அனைத்து ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுமார் 13 வருடங்களாக இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு நஷ்ட ஈடும் கொடுக்காமல் அப்படியே மாத சம்பளத்தை கொடுத்து நிறுத்திவிட்டார்களாம். இந்த சம்பவத்தின் மூலம் இனி மேல் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் புதிய படங்களை தயாரிக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.