தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் வந்ததால் இதனை கருத்தில் கொண்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இருந்தாலும் நீண்ட காலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி மற்றும் கடலூராகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு பத்து நியாய விலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாய விலை கடைகளில் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
