இன்றைய காலகட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதுதான் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதன்படி தற்போது மும்பையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மும்பையில் 16 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 40 வயது ஆசிரியர் ஒருவர் போக்சோ வழக்கில் கைதாகி உள்ளார். பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆக பணியாற்றிய அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இப்படியான நிலையில் அதே பள்ளியில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவனுடன் 2024 முதல் அவர் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதற்கு அந்த ஆசிரியையின் தோழியும் உடந்தையாக இருந்துள்ளார். மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்த போது ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்து அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த ஆசிரியையை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
