62 வயசுல இப்படி ஒரு ஆசையா?… பட்டும் படாம பேசிய நடிகை அம்பிகா… கலாய்க்கும் ரசிகர்கள்..!

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகையாக இருந்து வருபவர் தான் அம்பிகா. இவர் தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சக்களத்தி என்ற திரைப்படம் மூலமாகத்தான் அம்பிகா நடிகையாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஏழு நாட்கள், காதல் பரிசு, காக்கி சட்டை, படிக்காதவன், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, சிவாஜி கணேசன் மற்றும் பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த தென்னிந்திய முன்னணி நடிகையாக மாறினார்.

Happy Birthday To the Yesteryear Queen of South Indian Cinema Actress Ambika  | HBD Actress Ambika | நடிகை அம்பிகா பிறந்தநாள் ஆல்பம்

   

அம்பிகா என்.ஆர்.ஐ பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிறகு விவாகரத்து பெற்று தற்போது தன் மகன்களுடன் நம்பி காய் சென்னையில் வசித்து வருகின்றார். ஒரு கட்டத்தில் அம்பிகா குணச்சித்திரம் மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், ஜி டான்ஸ் லீக் போன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார்.

   

தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல் | ambika -  hindutamil.in

 

இதனிடையே கடந்த சில நாட்களாக அரசியல் விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அம்பிகா பல பிரபலங்களின் கருத்துக்களுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றார். இப்படியான நிலையில் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த அம்பிகா தனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் உள்ளதாகவும் எந்த கட்சி என்பதை பிறகு அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். 62 வயதில் தற்போது அரசியலில் களமிறங்கும் ஆசை அம்பிகாவுக்கு வந்துள்ள நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.