2016 பாணி.. 2026ல் திமுக போடும் வெற்றி கணக்கு… பக்காவாக காய் நகர்த்தும் ஸ்டாலின்..!

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் DMK + ADMK + NTK + TVK என தேர்தலை சந்தித்தால் அது ஆளும் கட்சியான திமுகவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணி 6.1% வாக்குகளை பெற்றது. விஜயகாந்த் கட்சியின் கூட்டணி தான் அதிமுகவிற்கு வெற்றி, திமுகவுக்கு தோல்வியை தந்தது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதே பாணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி 10 சதவீதம் வாக்குகளை பிரித்தாலும் அது ஆளும் திமுகவுக்கு வெற்றியை தரும் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் இதை வைத்துதான் சட்டமன்றத் தேர்தலுக்கான காய் நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.