முன்னணி நடிகரான சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆனார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் சூர்யாவின் சம்பளம் சேர்த்து படத்தை எடுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஆகும் என கூறப்படுகிறது.
மேலும் 1960 கால கட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி புறநானூறு படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அந்த படத்தை இப்போது எடுத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நடிகர் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லாததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
சுதா கொண்கரா சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளியான சூரரை போற்று திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று விருதுகளை குவித்த நிலையில் புறநானூறு படமும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.