என்னை யார் வீட்டுலையும் சேர்த்துக்கல ; கண்கலங்கிய பேராண்மை பட நடிகை

By Deepika

Published on:

சென்னையில் பிறந்து வளர்ந்து , நடிகர் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ள பல பிரபலங்கள் நடித்த ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது , ​​ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேலிடம் அறிமுகப்படுத்த, காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சரண்யாவிற்கு கிடைத்தது.

Saranya nagh in kadhal

முதல் படமான ‘காதல்’ படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது. 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே, சில தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மை படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் வசுந்தரா, தன்சிகா ஆகியோருடன் இவரும் நடித்தார்.

   
Saranya nagh about health condition

இதை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார். பின்னர் தைராய்டு, pcos போன்ற பிரச்சனைகள் காரணமாக இவருடைய உடல் எடை கூடியது. ஆனால் இப்போது சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கிறார்.

saranya about her life

முருகர் குறித்தும், அவர் தன வாழ்வை மாற்றியது குறித்தும் இவர் பல பேட்டிகளில் கூறி வருகிறார், அவர் அந்த பெட்டியில் கூறும்போது, பலர் என்னை வீட்டில் சேர்த்து கொள்ளவே இல்லை, தவறாக பேசுவார் அப்போது இருந்தே கோவிலுக்கு தான் செல்வேன். கஷ்டத்தில் கடவுள், இனத்திலும் இறைவன் தான். என் வாழ்வே இப்போது அழகாக மாறிவிட்டது என கூறியுள்ளார் சரண்யா.

author avatar
Deepika