தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபு, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதற்காக விஜய் அங்கு சென்றார். அப்போது கேரளா ரசிகர்களை சந்தித்து விஜய் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. தளபதி விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடக்கும் என எதிர் பார்த்து கொண்டிருந்த நிலையில் ஷூட்டிங் சென்னையில் நடக்க போவதாக தகவல் வெளியானது. கேரளாவில் ஷூட்டிங் நடைபெற்று இருந்தால் இருவரும் சந்தித்து இருப்பார்கள் என பேசப்பட்டது. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் பேட்டி எடுக்க சென்றுள்ளார்.
அப்போது ரஜினிகாந்த் அவரிடம் விஜய் அரசியலில் ஈடுபட்டுவது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். கடைசியாக அந்த தம்பி ஜெயிக்கணும் என கூறியுள்ளார். தளபதியின் அரசியல் வருகை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அக்கறையுடன் கேள்வி கேட்டுள்ளாராம். மேற்கூறிய தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உரையாடும்போது பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.