பிரபல நடிகையான துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, கழுவேத்தி மூர்கன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அநீதி திரைப்படத்தில் துஷாரா அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் துஷாரா நடித்து வருகிறார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா விஜயன் கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படம் வெளியிடுவார்.
தற்போது மெத்தை மேல் அமர்ந்து படு கிளாமராக துஷாரா பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.