சூர்யா நடிப்பில் கடைசியாக ரிலீசான ரெட்ரோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். கருப்பு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நடிகர் சூர்யா ஏற்கனவே என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது ழகரம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் ஜித்து மாதவனின் திரைப்படமும், இரண்டாவதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் திரைப்படமும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
