படித்தால் தான் நடிக்க முடியுமா…? இப்போதான் எனக்கே அது தெரியும்…! மனம் திறந்து பேசிய நடிகை அனுபமா…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2025

Spread the love

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் தனுஷின் கொடி திரைப்படத்தில் நடித்தார். விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த பைசன் திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே நடிப்பு மிகவும் பிடிக்கும். ஆனால் என் பள்ளியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால் நன்றாக படிப்பவர்களால் தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும். அது என் மனதில் ஆழமாக பதிந்தது. நான் பள்ளியில் டாப்பர் கிடையாது. இதனால் நடிக்க முடியாது என்ற பயத்தால் நடிகையாக வேண்டும் என்ற கனவை ஒதுக்கி வைத்தேன். நான் வளர்ந்த பிறகு தான் படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்தது என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.