லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.. இந்தத் திரைப்படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. கூலி திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த கைதி 2 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த தகவலை அமீர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார். லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்சுக்குள் இதற்கு முன்பு வெளியான கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அதன் வரிசையில் கைதி 2 திரைப்படமும் உருவாக உள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளார். அதாவது விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கேமியும் ரோலில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை கைதி 2 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் வில்லனாக வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கார்த்திக்கும் சூர்யாவுக்கும் இடையே அதிரடியான சண்டை காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா கதாநாயகனாக நடித்த கங்கு வா படத்தில் கார்த்தி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது போல கார்த்தி நாயகனாக நடிக்கும் கைதி 2 திரைப்படத்தில் சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
