ரஜினி லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகின்றார். இந்த திரைப்படத்தை விரைவாக முடிப்பதற்கு அனைத்து திட்டமும் போட்டு வைத்து விட்டார். ஆனால் அந்த படத்திற்குப் பிறகு அவர் செய்யப் போகும் காரணத்தில் தான் பெரிய ரகசியம் அடங்கியுள்ளது. ஜெயலலிதா இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெற்று வந்தது. அங்குதான் டைகர் முத்துவேல் பாண்டியன் சம்பந்தமான காட்சிகளை நெல்சன் எடுத்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதமே ரஜினி அடிக்கடி கேரளா சென்று வந்தார். அங்கு மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் செய்லர் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் போன்றோர்களுக்கு இந்த பாகத்தில் அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜெயிலர் இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு ரஜினி 6 மாத காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதப்போவதால் ரஜினி ஆறு முதல் 8 மாதம் வரை சினிமாவிற்கு பிரேக் கொடுக்கிறார்.
ரஜினியின் திடீர் முடிவுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. ரஜினியிடம் தங்களுக்கு டேட் கொடுக்கும்படி ரெட் ஜெயன்ட் சுற்றி வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதனால் தேர்தல் நேரத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு படம் பண்ண வேண்டாம் என்ற முடிவில் ரஜினி உள்ளார். இதனால்தான் ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
