இயக்குனரைத் தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் ஹெச்.வினோத்.. அட இது நல்லா இருக்கேப்பா..!

By Nanthini on ஆனி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஹெச் வினோத். இவர் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை இயக்கினார். தற்போது இவர் நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தப் படத்தின் படபிடிப்பு எல்லாம் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து வினோத் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ?

   

இப்படியான நிலையில் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆன எவரிசையில் இயக்குனர் வினோத் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ள இயக்குனர் வினோத்துக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.