பாலிவுட்டில் கால் பதிக்கும் சூர்யா.. PAN இந்திய ஸ்டாராக புது அவதாரம் எடுக்கும் ROLEX..!!

By Priya Ram on செப்டம்பர் 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. நவம்பர் மாதம் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

   

இந்த நிலையில் பிரபல நடிகரான ஷாருக்கான் தனது படங்களில் தென்னிந்திய பிரபலங்களோடு இணைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் அனைவரும் கொண்டாடிய திரைப்படம் தூம். இதுவரை அந்த படத்தின் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

 

தற்போது தூம் படத்தின் நான்காவது பாகம் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வேறு எந்த படத்தில் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக தெரிகிறது.

சூர்யாவை பொருத்தவரை ஏற்கனவே அவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இப்போது தூம் படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆனால் பாலிவுட்டிலும் மிரட்டலான வில்லனாக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

author avatar
Priya Ram