யார்றா இவன் லூசுன்னு நெனச்சேன்… ஆனா மன்சூர் அலிகான் திறமையக் கரெக்டா கண்டுபிடிச்சது அவர்தான் – தயாரிப்பாளர் டி சிவா பகிர்ந்த தகவல்!

By vinoth on செப்டம்பர் 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆர் கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் அவரை வெகுஜனத்துக்கு பிடித்த நடிகராக்கியது. அதன் பிறகு ஆர் கே செல்வமணி விஜயகாந்த் கூட்டணியில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்தார்.

வீரப்பனின் கதாபாத்திரத்தை அடியொட்டிய வீரபத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் கேப்டன் பிரபாகரன் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியால்  அவருக்கு 90 களில் பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 2000களுக்குப் பிறகு அவருக்கு நகைச்சுவையான வேடங்களும் கிடைக்க அதிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

   

#image_title

   

புது தலைமுறை இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்தான்’ என்று கூறினார். மன்சூர் அலிகான் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்கி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

 

மன்சூர் அலிகானுக்கு அந்த படத்தில் எப்படி வாய்ப்புக் கிடைத்தது, அவர் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரைத்தது யார் என்பது பற்றி தயாரிப்பாளர் டி சிவா பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

அதில் “நான் அப்போது இப்ராஹிம் ராவுத்தரிடம் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மன்சூர் அலிகான் போட்டோ கொடுக்க வருவான். ஆள் அப்போதும் திமிராகவே பேசுவான். அவன் பாடி லாங்குவேஜ் பார்த்தால் ‘யார்றா இவன் லூசுப் பயல்’ என்பது போல இருக்கும். ஆனால் இப்ராஹிம் ராவுத்தர்தான் அவனுக்குள் என்னமோ இருப்பதைக் கண்டுபிடித்தார்.

#image_title

அவனை சரியாகத்தூக்கி கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் கதாபாத்திரத்தில் போட்டார். படம் வெளியான போது அவனுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இப்படி பலபேரைக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார் ராவுத்தர்’ எனக் கூறியுள்ளார்.