பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் நடித்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படம் பல மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44-வது படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய்யிடம் ஆர்.ஜே பாலாஜி முன்னதாக அந்த கதையை கூறியுள்ளார். ஆனால் அந்த கதையில் விஜய் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளார்.
அதன் பிறகு விஜயை வைத்த ஆர்.ஜே பாலாஜி படத்தை இயக்க முடியவில்லை. அந்த கதையை இப்போது சூர்யாவிடம் சொல்லி ஆர்.ஜே பாலாஜி ஓகே வாங்கி விட்டாராம். கடந்த 2019-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான என்.ஜி.கே திரைப்படத்தில் சூர்யா நடித்தார். இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீ சிங், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. இந்த படம் தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தையும் ட்ரீம் வாரியார் நிறுவனம்தான் தயாரித்தது. இப்போது சூர்யாவை வைத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தையும் வாரியர் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. செல்வராகவன் எடுத்த படம் தோல்வியை சந்தித்ததால் சூர்யாவை வைத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் வெற்றி கனியை எட்டி பறிக்க டிரீம் வாரியார் நிறுவனம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.