பிரபல நடிகரான கார்த்தி நடிப்பில் மையலகன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்தி லட்டு பிரச்சனை சென்சேஷனல் என கூறியுள்ளார். அதனை எச்சரிக்கும் விதமாக பவன் கல்யாண் பேசிய வீடியோ வைரலானதால் கார்த்தியும் சூர்யாவும் தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதனால் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தேசிய அளவில் சனாதன தர்ம பாதுகாப்பு வரையறை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது. தேசிய அளவில் இது குறித்த விவாதம் தேவை என கூறியிருந்தார். அதனை குறிப்பிட்டு பிரகாஷ்ராஜ் தயவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் ஏன் அச்சத்தை பரப்பி தேசிய அளவில் பிரச்சினையை பெரிதாகுகிறீர்கள் என கூறியிருந்தார்.
இதனை கவனித்த பவன் கல்யாண் பிரச்சனை நடந்த பிறகும் பேசக்கூடாது என்றால் எப்படி? இந்த விவகாரத்தில் எங்களை மேலும் காயப்படுத்தாதீர்கள். அப்படி பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கும் விதமாக பேசினார். அதற்கு பிரகாஷ்ராஜ் பவன் கல்யாண் சார் செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் பேசியது இப்போது பார்த்தேன் நான் சொன்னது என்ன நீங்கள் தவறாக புரிந்து கொண்டது என்ன நான் இப்போது வெளிநாட்டில் படபிடிப்பில் இருக்கிறேன் 30-ஆம் தேதிக்கு பிறகு வந்து உங்களை நினைத்து கேள்விகளுக்கும் நான் பதில் கூறுகிறேன்.
இதுவே தன்மானத்தமிழன் விஜயகாந்தாக இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.
பாகுபலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திர நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி. pic.twitter.com/lKwXgAR91p
— Blue Sattai Maran (@tamiltalkies) September 24, 2024
அதற்குள் என் டுவீட்டை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் உண்மையில் பிரச்சனை பவன் கல்யாண்கும் பிரகாஷ்ராஜுக்கும் தான். ஆனால் கார்த்தி நடுவில் வந்து மாட்டிக்கிட்டாரே. தன்மானத்தமிழன் விஜயகாந்த் இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். பாகுபலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திரா நடிகர் பவன் கல்யாண் இடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி என எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பதிவிட்டுள்ளார்.
உண்மைல இவங்க ரெண்டு பேருக்கும்தான் பிரச்னை போல.
பாவம் கார்த்தி.
குறுக்க பூந்து.. மன்னிப்பெல்லாம் கேட்டு… pic.twitter.com/SB9h1Xf3E5
— Blue Sattai Maran (@tamiltalkies) September 24, 2024