தற்போது இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரத்து விஷயம் தான். ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட உடனே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா வட்டாரங்கள் முழுவதும் இது பேச்சு பொருளானது.

அடுத்ததாக ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி இவர் வெளியிட்ட அறிக்கை எனக்கு தெரியவே தெரியாது என் சம்பந்தமில்லாமல் இதெல்லாம் நடந்திருக்கிறது என்று மறு அறிக்கையை வெளியிட்டார். இது இன்னும் நிலைமையை மோசமாக்கியது. அதற்கு ஒரு படி மேலாக மீடியா ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா தான். இருவரும் பல இடங்களில் ஒன்றாக சென்றுள்ளனர் என்று பிரச்சினைக்கும் மேல் பிரச்சினையாக கிளம்பி இருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்பட நிகழ்ச்சியின் போதும் கூட பத்திரிகையாளர்களிடம் என் தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைக்க விடுங்க பாடகி கெனிஷாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் வாழ்க்கையே எடுத்து வச்சு பேசாதீங்க. அவர் ஒரு ஹீலர் மற்றும் சைக்கியாட்ரிஸ்ட் என்று பதில் அளித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று ஜெயம்ரவி போலீசில் புகார் ஒன்று அளித்து இருப்பதாகவும் செய்தி வெளியானது.
அதில் ஆர்த்தி தம்மை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் எனவும் தனது உடைமைகளை பெற்றுத் தருமாறும் போலீசில் ஜெயம் ரவி புகார் அளித்ததாகவும் அந்த விஷயம் கசியும் முன்னரே அவர் அறிக்கையை வெளியிட்டு விட்டதாகவும் இன்று செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொண்ட கெனிஷா தற்போது தனது வலைதள பக்கத்தில் கொந்தளித்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

கெனிஷா தான் போட்டிருக்கும் பதிவில் சுசித்ராவை சாடியிருப்பதாக தெரிகிறது. அவர் இது உங்கள் வீட்டு பிரச்சினை இல்லை. அவர்கள் வீட்டு பிரச்சினை அது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தேவையில்லாமல் இதில் கருத்துக்களை கூறாதீர்கள். உங்கள் கருத்துக்களை யாரும் கேட்கவில்லை. அடுத்ததாக என்னை இந்த பிரச்சனையில் தயவு செய்து இழுக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எல்லோரிடமும் அன்பாக இருங்கள் அதுதான் இப்போதைய உலகிற்கு தேவை என்று பதிவிட்டு இருக்கிறார் பாடகி கெனிஷா.
