மீண்டும் அதிமுகவில் பரபரப்பு…! செங்கோட்டையன் அடுத்தகட்ட நகர்வு.. குவியும் ஆதரவாளர்கள்..!!.

By Soundarya on புரட்டாதி 10, 2025

Spread the love

பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் அவரவர் கட்சிக்குள்ளேயே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்லும் நிலையில் இபிஎஸ் எதற்கும் செவி சாய்க்காமல் தன்னந்தனி ஆளாக நின்று அதிமுகவை வழிநடத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது  முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி செங்கோட்டையனுக்கு  ஏற்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நகர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் சற்றுநேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால், குள்ளம்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு ஆதாரவாளர்கள் குவிந்துள்ளனர்.