உங்ககிட்ட ஏடிஎம் கார்டு இருக்கா?.. இந்த எண்களை தப்பி தவறியும் பின் நம்பராக யூஸ் பண்ணாதீங்க.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

உங்களுடைய வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். நாம் இந்த வகை கார்டுகள் அனைத்தையுமே நான்கு எண் கொண்ட இலக்கை பயன்படுத்தி உபயோகித்து வருகிறோம். எது மாதிரியான பின் நம்பரை உபயோகிக்கனும் உபயோகிக்க கூடாது என்று பார்க்கலாம். பரவலாகவே உலகில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தும் எண்ணில் 1234 உள்ளது. அதேபோல் ஒரே எண் தொடர்ந்து வருவது நினைவில் வைத்துக் கொள்ள ஈசியாக இருக்கும். அதாவது 1111 இதுபோன்ற எண். திரும்பத் திரும்ப வரும் எண்கள் 1212. இது போன்ற எண்களை நாம் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும் உபயோகமாக உள்ளது.

பிறந்த தேதிகள் மற்றும் வருடம் தொடர்பான எண்களை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சமூக ஊடகங்களில் சிலர் பிறந்த தேதி வருடங்களை பதிவிட்டு இருப்பீர்கள். இதனால் தேவையில்லாத வம்புகள் வர வாய்ப்புள்ளது. அதேபோல் வாகன எண், ஆதார் எண், அடையாள எண்கள் மற்றும் மொபைல் நம்பரின் கடைசி 4 எண் இது போன்ற எண்களை வைப்பது மிகவும் ஆபத்தானது. சில எண்களில் அதிகமான ஆபத்து உள்ளதாக சைபர் பாதுகாப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 1234, 0000, 2580 இது போன்ற எண்களை தவிர்ப்பது நல்லது சில நொடிகளே ஹேக் செய்து விடுவார்கள். எப்போதுமே பின் தொடரும் எண்களை வைக்காதீர்கள் உதாரணத்திற்கு 3957, 2510, 9418 இதுபோன்ற எண்களை வைக்கலாம். அதேபோல் ஆறிலிருந்து 12 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு  எண்களை  மாற்றுவது முக்கியம். இது போன்ற எளிய முறையை பின்பற்றி உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.