சாகர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் குராய் கிராமத்தில் சாலையோர சகதியில் விழுந்து 6 மணி நேரமாக அசைவில்லாமல் இருந்த ஒரு வாலிபரை கிராம மக்கள் பிணம் என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை புரட்ட முயற்சி செய்தபோது திடீரென்று அந்த இளைஞர் எழுந்து, “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்”என்று கூறியதும் அங்கிருந்து அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் அதிகமாக மது அருந்தியதால் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த போது தடுமாறி சகதியில் விழுந்ததாக தெரிகிறது. மது போதையில் இருந்ததால் அவர் எழுந்திருக்க முடியாமல் அசைவின்றி கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இளைஞர் திடீரென்று எழுந்து பேச ஆரம்பித்ததும் சிலர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்தோர் இதை பேயின் வரவு போல எண்ணியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
