தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி… திடீர் திருப்பம்…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதானாலும் பிற நடிகர்களுக்கு மிகவும் சவால் கொடுக்கும் விதமாக இன்றும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறுகின்றார். ரசிகர்கள் மத்தியிலும் நீண்ட எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறுதியாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அளித்தது.

மறுபக்கம் இவருடைய நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி திமுகவின் உதவியுடன் எம்பி ஆகிவிட்டார். சமீபத்தில் கூட ரஜினியை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றிருந்தார்.  இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டாரை மீண்டும் அரசியல் மேகம் சூழ்ந்துள்ளது. ரஜினியை கவர்னர் பதவி தேடி வந்ததாக அவரது அண்ணன் சத்ய நாராயண ராவ் கூறியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக கூறி பிறகு அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய ரஜினி அரசியல் வளையத்தில் சிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவரை கவர்னர் பதவி மூலம் இழுக்க பாஜக முயல்வதாக பலரும் கருத்துக்கூறி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

8 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

9 மணத்தியாலங்கள் ago