Categories: சினிமா

மிகப்பெரிய விஷயத்தை கொடுத்து சூப்பர் ஸ்டாரை கௌரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.. நன்றி தெரிவித்து ரஜினி வெளியிட்ட வைரல் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் தலைவர் என்று செல்லப் பெயரால் அழைக்கபட்ட வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் லால் சலாம். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். 70 வயதை தாண்டிய நிலையிலும் இடம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதே எனர்ஜியுடன் படத்தின் நடித்து வருகின்றார். கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படமாக அமைந்தது.

#image_title

இதனால் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரக அரசு ரஜினிகாந்த்துக்கு கோல்டன் விசா வழங்கி இருக்கின்றது. இதன் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த 10 ஆண்டுகளுக்கு யூஏஇ அரசின் குடிமகனாக கருதப்படுவார்.

இந்த கௌரவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது தனது நண்பர் லூலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அளித்து நன்றி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர் இல்லாமல் இந்த கௌரவம் கிடைத்திருக்காது என்று தெரிவித்திருந்தார். சமீபத்தில் யூசப் அலியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கப்பட்டு வருகின்றது. திரைத்துறையை சேர்ந்த பல நடிகர்கள் இதனை வாங்கி இருக்கிறார்கள். ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்பட்டி, துல்கர் சல்மான், கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, த்ரிஷா உள்ளிட்டவர்கள் கோல்டன் விசா பெற்றிருந்த நிலையில் இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தின் இணைந்து இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

ஆளுநருக்கு விஜய் மீண்டும் கடிதம்… என்ன காரணம் தெரியுமா..? நொடிக்கு நொடி பரபரப்பில் தமிழகம்…!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…

9 minutes ago

BREAKING: காலையிலேயே ராகுலுக்கு அழைப்பு விடுத்தார் விஜய்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

14 minutes ago

BIG NEWS: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு..? மே-8 ஆம் தேதி வெளியாகாது… தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…

19 minutes ago

“இப்படி முதுகுல குத்திட்டீங்களே” அன்னைக்கு ஸ்டாலின் செஞ்சது மறந்து போச்சா..? காங்கிரஸை கடுமையாக சாடிய திமுக…!!

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது 'எக்ஸ்' (X)…

22 minutes ago

மு.க ஸ்டாலின் தோல்வி… அதிர்ச்சியில் உயிரிழந்த திமுக நிர்வாகி… தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மரணம்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சியை இழந்ததோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தி கேட்டு…

26 minutes ago