“கில்லி” பிரியாணின்னு பேர் வெச்சது சூப்பர் ஸ்டார் தான்… ஃப்ளாஷ் பேக்கை சொன்ன தாஜ் ஹோட்டல் ஊழியர்..!!

By Priya Ram on அக்டோபர் 15, 2024

Spread the love

பிரியாணியை விரும்பி சாப்பிட ஏராளமானோர் இருக்கின்றனர். சென்னையில் பல்வேறு ஸ்டைல் பிரியாணிகள் உள்ளது. ஆனால் தாஜ் கோரமண்டலில் உள்ள கில்லி பிரியாணியை பிடித்தவர்கள் ஏராளமானவர் உள்ளனர். அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் சமையல் கலைஞர் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

   

அப்போது கில்லி பிரியாணி என பெயர் வந்தது. அதற்கு என்ன காரணம் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சமையல் கலைஞர் ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது இதுவரை சாப்பிடாத வித்தியாசமான சுவை கொண்ட பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார்.

   

 

உடனே சமையல் கலைஞர் பிரியாணியில் ரோகன் மசாலாவை சேர்த்து பரிமாறி உள்ளார். அதனை சாப்பிட்ட ரஜினிகாந்த் பிரியாணி கில்லி மாதிரி இருக்கு என கூறினாராம். அதிலிருந்து அந்த பிரியாணிக்கு கில்லி பிரியாணி என பெயரிடப்பட்டது. அந்த ஹோட்டலில் கில்லி பிரியாணியை சாப்பிடுவதற்காக மட்டுமே எந்த நேரத்திலும் குடும்பத்தினர் வருவார்களாம்.