பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் நடிகை அனுபமாவின் வேகமாக பரவி வருகிறது. நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடையே பிரபலமானார். பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் அனுமபா நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் திரிஷா நடிப்பில் ரிலீசான கொடி திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக அனுபமா நடித்தார். இதுதான் அனுபமாவுக்கு தமிழில் முதல். திரைப்படம் தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் தமிழ் படங்களில் நடிக்க அனுபமா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே திரைப்படத்தில் அனுபமா நடித்தார். ஒரே வருடத்தில் தெலுங்கு சினிமாவில் 5 படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார்.