அடம் பிடித்த பேரனை நடிகர் ரஜினிகாந்த் பள்ளிக்கு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த வயதிலும் சினிமாவில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது டி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அடிக்கடி நேரம் செலவிடுவார். நடிகர் ரஜினிகாந்த்-க்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றொருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்கள் பெரிய பசங்களாக வளர்ந்து விட்டார்கள்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன்கள் இருவரும் சிறு சிறு குழந்தைகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று 9.40 மணியளவில் இரண்டு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் ரஜினிகாந்த் தனது பேரனுடன் காரில் சென்று கொண்டிருக்கின்றார்.
இந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் தெரிவித்திருந்ததாவது “இன்று எனது மகன் பள்ளிக்குப் போக மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டே இருந்தான். அவனுடன் நான் எவ்வளவோ போராடியும் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. உடனே சூப்பர் ஹீரோ தாத்தாவான எனது அப்பாவை கூப்பிட்டு விவரத்தை சொன்னேன்.
உடனே எனது மகனிடம் அன்பாக பேசி அவனை பள்ளிக்குக் கொண்டு சென்று விட்டு வந்தார். அப்பா நீங்கள் திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் உங்களிடம் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து விடுகிறீர்கள்” என்று பதிவிட்டு இருந்தார். இதையடுத்து அவர் தனது பேரனை பள்ளிக்கு கொண்டு போய் விட்டதை பார்த்து அங்கிருந்த குழந்தைகள் ஷாக்கிங் உடன் ரஜினிகாந்தை பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.