செல்பி எடுக்கலைன்ன செய்வினை.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகரை மிரட்டிய பெண்..!!

By Priya Ram on ஜூலை 26, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகிறது. தினமும் வித்தியாசமான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ்குமார் நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்திற்காகவே சீரியலை பார்ப்பவர்கள் அதிகம்.

   

இந்த நிலையில் பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சதீஷ் குமார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு காலாசேத்ரா காலனியில் இருக்கும் அருள்மிகு அறுபடை முருகன் கோவிலுக்கு சதீஷ் குமார் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் செல்ஃபி எடுக்க வேண்டும் என சதீஷ் குமாருக்கு அருகே சென்றுள்ளார்.

   

 

ஆனால் சதீஷ்குமார் செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. சில நாட்கள் கழித்து அந்த பெண் மீண்டும் சதீஷ்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அடிக்கடி தொந்தரவு செய்ததால் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை சதீஷ்குமார் பிளாக் செய்துவிட்டார்.

அதோடு விட்டு விடாமல் அந்த பெண் எப்படியோ சதீஷ்குமாரின் வீட்டை தேடி கண்டுபிடித்து  சென்றுள்ளார். பின்னர் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை காட்டி செய்வினை செய்து விடுவேன் என கூறி சதீஷ்குமாரை மிரட்டியுள்ளார். இது குறித்து சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு செல்பி எடுக்காததற்கு இப்படி எல்லாம் பண்ணுவாங்களா என சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.