பட்டு வேஷ்டி, சட்டையில் பளபளக்கும் சூப்பர் ஸ்டார்… அம்பானி மகன் திருமணத்தில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் பிக்ஸ்…

By Begam on பங்குனி 4, 2024

Spread the love

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட திருமண விழாவிற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்தது.

   

மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்று முடிந்த இத்திருமண கொண்டாட்டத்தில் வணிக மற்றும் தொழில்நுட்ப உலகின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.  அதேபோல் சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், ராம் சரண் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், அமீர்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

   

 

மேலும், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட், சாம் கரன், சாய்னா நேவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் திரையுலகை பொறுத்த வரை இயக்குனர் அட்லீ தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மனைவி, மகள் என தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள்  தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.